காத்திருப்பாயா
கொட்டும் பனிக்காலம்தான்...
உந்தன் கதகதப்பு
கிட்டும் என காத்திருக்கிறேன்....
அடைத்து பெய்யும் மழைக்காலம்தான்...
துடைத்துவிட
உன் தாவணி
கிடைக்கும் என காத்திருக்கிறேன்....
வத்திவிட்ட வெயில் காலம்தான்
ஒத்திவிட உந்தன் இதழ்கள்
கிடைக்கும் என காத்திருக்கிறேன்....
கசந்த காலங்களை
கடந்ததெல்லாம்- கன்னி உனக்கு
வசந்த காலத்தை அளித்திடவே....
நம்பிக்கையுடன்
" காத்திருப்பாயா?...."

