காதலர் தினம் - 2015
உன் திராட்சை பழ கண்கள்
என்னை கட்டி இழுக்க வில்லை !
உன் தென்றல் வருடும் கூந்தல்
என்னை கட்டி இழுக்க வில்லை !
உன் காதோரம் கதை கேட்க்கும் கம்பல்
என்னை கட்டி இழுக்க வில்லை !
உன் புன்னகயுடன் சிணுங்கி விளையாடும் வண்ண வண்ண வளையல்கள்
என்னை கட்டி இழுக்க வில்லை !
உன் இடை உடைகள் யாவும்
என்னை கட்டி இழுக்க வில்லை !
உன்னிடம் நான் பழகிய சில நாட்களில்
கண்டேன் உன்மேல் காதலை !
காரணம்
நான் அறிவேன் என்றுமே உன் அன்பு அது என்று சொல்வேன் !
அன்பே மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் !
மூன்று வருடங்கள் கடந்தும்
இந்த காதலர் தின
திரு நாளில் !
நான் உன்னை உயிராக இன்று போல் என்றுமே காதலிப்பேன் என்று.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
