என் நெஞ்சத்தில் முருகன்

என் நெஞ்சத்தில் இருக்கும் முருகனே...!
உமையவளின் மகனே...!
என் நாளும் உன்னை தொடர்வேன்,எந்தன் திருப்பணியை...!
குறையை தீர்க்க நான் வருவேன்,என் குறைகளைதீர்த்தருள்வாய் என்று
ஆண்டவனே...!
முதுமையில் தளர்வடைந்தாலும் எந்நாளும் உன்னை தேடி வருவேன்...!
அழகின் மைந்தனே...!
என் ஆண்டவன் ஈசனின் மகனே...!
பித்தான என் இதயத்தில் இருக்கும் முருகா...!
கவலையில் நான் வாடிய போது என்னை தேடி வந்தாய்...!
நான் காணும் கனவில் அழகு மயில் வடிவில் வந்த என் அழகனே...!
எந்நாளும் உன்னை மறவேன்.
நினைவில் இருப்பது ஒன்று தான்...!
உன் "கோவில்" மலர்வதற்க்கு...!
வருடா வருடம் உன் திருவடியை தரிசிக்க நான் வருவேன்...!
உலகில் உன்னை போல் "தெய்வம்" இல்லை...!
எந்நாளும் உன் நினைவில் வாழ்கிறேன்...!
முருகா...!