அழியாத உயிருள்ள கனவு - உதயா

இருக் காலின்றி மண்ணில்
.............இருக் கரமோடு பிறந்தேன்
ஒருத் தாயின்றி வாழ்வில்
.............இருதாயோடு வளர்ந்தேன்
ஊனமாய்ப் பிறந்ததற்கு
.............உறவுகள் வெருத்தப் போதும்
என்னுடன் பிறந்த தமக்கை
.............அவள் என்னை ஒதுக்கியதேயில்லை
கல்லானக் கடவுகளை கண்டதில்லை
............. என் கண் முன்பே
அக்கடவலும் தோற்றுப் போவான்
.............என் அக்காவின் பாசத்தின் முன்பே
ஒன்றுக்கும் உதவாத என்னை
.............அவள் சுமையாக நினைத்ததேல்லை
பச்சிளம் குழந்தையாய் என்னை
.............அவள் பார்க்க தவறியதேயில்லை
என்னைக் குறையோடு படைத்த
.............பிரம்மனை பழித்ததும்முண்டு
இருந்தும் ஆயிரம் தாயாக அவளைப் தமக்கையாய்
.............எனக்கு அளித்ததால் மகிழ்ந்ததும்முண்டு
வாழ்கையே நான் வெருத்ததும்முண்டு
.............அவள் அரவணைப்பில் வெறுப்பை எரித்ததும்முண்டு
பசியினால் நான் வாடியதேயில்லை
.............அவள் பாசத்தால் என் மனம் நிறையா நாளேயில்லை
எனக்கும் வாழ்நாளில் ஒருக் கனவுண்டு
.............அக்கனவிற்கும் அழியாத உயிருண்டு
அடுத்தப் பிறவியில் நான் பெண்ணாகப் பிறக்கவேண்டும்
.............என் தமக்கை அவளை மகளாக பெறவேண்டும்
ஆயிரம் பிறவியில் நான் தாயாக பிறந்தாலும்
.............ஆயிரம் முறையும் அவளை மகளாக பெற்றாலும்
அவள் இப்பிறவியில் என்மேல் கொண்ட
.............அன்பிற்கு ஈடுயினையாக்க இயலாது ........