காதலே காதலே

காதலே காதலே...!!
நீ இல்லை என்றால்..
மனித இனம்..
சாதலே... சாதலே...!!
காதலே நீ..!
காதலில் வென்று..
உன்னை போற்றும்
உள்ளங்களில் இன்னும்..
காத்துகொண்டிருக்கிறாய்..!?
இன்னும் மீதி காலம்..
அவர்கள் உண்மை காதலர்களாக
வாழ்கிறார்களா என்று..!!
காதலே நீ..!
காதலில் தோற்று..
உன்னை திட்டும்
உள்ளங்களில் இன்னும்..
அழுது கொண்டிருக்கிறாய்..!?
அவர்கள் இன்னும்..
"உண்மை காதலின்" ஆழத்தை
அறியவில்லை என்று..!!
காதலே நீ..!
காதலில் தோற்றாலும்..
தங்கள் நேசித்தவர்களையும்,
உன்னையும் போற்றும்
அன்பு உள்ளங்களில்..
நீ என்றும்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்..!!