மதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மதன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Oct-2014
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  10

என்னைப் பற்றி...

மதன் அன்பு...!..மன்மதன் மீது பாய்கின்ற அம்பு..!!rn

என் படைப்புகள்
மதன் செய்திகள்
மதன் - மணிமேகலை பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2015 9:22 am

நீ தான் ஏமாந்திருக்க கூடாதென்ற
வார்த்தைகளுக்கு முன்பாகவே
முளையிலேயே கிள்ளி எறிந்தேன்
எனது சிறு காதலையும்...

தோளின் ஈர்ப்பால் வரும்
சிலரின் ஆசை போதைகளை
துரத்திவிட்டேன் இருந்தும்கூட
ஆசிட் வீச்சுக்கு பயந்துதான் செல்கிறேன்
அவர்கள் இருக்கும் வீதிகளில்...

தந்தையின் பேச்சை
தட்டாது கேட்டு வந்தேன்
விரைவிலேயே மணம் முடிப்பார்
என்ற அக்காவின் அனுபவ
வாழ்க்கையை வேடிக்கை
பார்த்தவர்களுல் ஒருத்தியாய்...

பெண்ணுரிமையை பிச்சையாய்
போடும் சில வள்ளல்களுக்கு
எனது நன்றிகளற்ற அமைதி
மட்டுமே தலைவணங்கி நின்றது
பெண் சுதந்திரம் பேசும்
பெண்ணாதிக்கவாதி என்ற
முத்திரையை விரும்பாதவளாய்...

மேலும்

மீள முடியாமல் மீள்பதிவு.. ....................... மீளா பதிவு 06-May-2015 11:14 am
இதை இதைத் தான் ... நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு திருத்தம் சொன்னால் இப்படியா அப்படியே ஏற்றுக்கொள்வது? நன்றி தோழமையே! (நீங்கள் சொன்ன பகல் இரவு விளக்கம் சிறப்பானது. இருந்தாலும்..... சிறப்பானதைவிட பொருத்தமானதே, மிகவும் சரியானதாக இருக்கும்) 04-May-2015 9:53 pm
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழமையே... நீ தான் ஏமாந்திருக்க கூடாதென்ற வார்த்தைகளுக்கு முன்பாகவே முளையிலேயே கிள்ளி எறிந்தேன் எனது சிறு காதலையும்... // அவ்வாறே மாற்றிவிட்டேன்.. பெட்டைகோழி கூவி விடியா உலகமது இரவின்றி போகட்டும்.. பகலொன்றையே கண்டு சூரியன் சுட்டு எரிக்கட்டும்.. // இரவென்ற ஒன்று இருந்தால் தானே விடியலை பற்றி பேசுவார்கள்... அது மட்டுமின்றி இரவை பெண்ணுக்கான ஒரு பொழுதாகவும், நிலவையும் பெண்ணாகவே பாவித்து கூறுகையில்.. அந்த இரவே இன்றி போகட்டும்.. சூரியனை ஆணாக சொல்கிறார்களே அந்த சூரியனாலேயே சுட்டெரிக்கப்பட்டு இரவின்... சுகமின்றி போகட்டும் என்ற பொருளில் எழுதினேன்... தாங்கள் சொன்ன மாற்றமும் மிக நன்றாக உள்ளது.. புரிந்து தோழமை உணர்வோடு கருத்திட்டதில்.. மகிழ்ந்தேன்... நன்றி 04-May-2015 9:48 pm
மிக நல்ல படைப்பு. பாராட்டுகள் //நீ தான் ஏமாந்திருக்க கூடாதென்ற வார்த்தைகளுக்கு முன்பாகவே துளிரிலேயே கிள்ளி எறிந்தேன் எனது சிறு காதலையும்... // //பெட்டைகோழி கூவி விடியா உலகமது இரவின்றி போகட்டும்.. பகலொன்றையே கண்டு சூரியன் சுட்டு எரிக்கட்டும்.. // மேற்கண்ட வரிகளில், நான் விரும்பிய மாற்றங்கள்... //நீ தான் ஏமாந்திருக்க கூடாதென்ற வார்த்தைகளுக்கு முன்பாகவே முளையிலேயே கிள்ளி எறிந்தேன் எனது சிறு காதலையும்... // //பெட்டைகோழி கூவி விடியா உலகமது பகலின்றிப் போகட்டும்.. இரவொன்றையே கண்டு இருண்டு கிடக்கட்டும்.. // பெட்டைக் கோழி கூவி பொழுது விடியாது என்று பெண்மையை இளக்காரமாகச் சொல்வார்கள். அப்படியென்றால் அப்படிப்பட்ட உலகம் விடியாமல் இருளிலேயே கிடக்கட்டும், என்று பொருள்படச் சொல்வது சிறப்பாக இருக்குமென்று நான் கருதுகிறேன். வேறு காரணங்களுக்காக நீங்கள் அந்த வரிகளைக் கையாண்டிருந்தாலும், நலமே. 04-May-2015 7:07 pm
மதன் - மோனிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2015 8:49 pm

எண்ணம் கடலென பெருகும் பொழுதுகள்
உணர்ச்சிகள் அலையாய் உள்ளத்தை உரசிட
செங்கனி இதழ்களில் வரமறுக்கும் வார்த்தைகள்
வலையில் சிக்காத மீன்களோ

திரைகடல் தேடியும் திரவியம் தேட
மானுடம் மந்தை மந்தையாய் ஓட
கொஞ்சி விளையாடும் பிஞ்சு மழலைகள்
வலையில் சிக்காத மீன்களோ

பணம் இழையாக பின்னல் போட
கையூட்டின் கைகள் பின்னிய வலையோ
நேர்மை மாற நெஞ்சங்கள் சில
வலையில் சிக்காத மீன்களோ...

மேலும்

அந்த.... அற்புத கோயில் வளாகத்தில்.. அந்த.....அருமையான...இசைகச்சேரி நடக்கும் நேரத்தில்.. . அந்த..... அமைதியான...கருவறையின் உள்ளே.. அந்த... தேவதையின் அழகு விழிகள்.. இவனை... பார்த்து சென்றது...இவன்...பாரா வண்ணம்... அந்த... விழிகள்... வலையில் சிக்காத மீன்களோ.....!! 15-Apr-2015 9:24 pm
அழகு .... 15-Apr-2015 8:57 pm
அருமை 15-Apr-2015 8:55 pm
மதன் - அமுதினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2015 6:08 pm

எந்தன் உயிர் காதலனே
உந்தன் உள்ளத்தில் எரிகிறேனே
சந்தனமாய் தேகத்தில் கரைகிறேனே
வந்தனமாய் காதலில் எழுகிறேனே
இது காதலா.. காதலா ?
நம் காதலா காதலா?
எது காதலா காதலா ?

காதுக்குள் நுழையும் ஒலியா
கானகத்தில் பெய்யும் மழையா
தேன்சிந்தும் இன்னிசை ராகமா
கார்கால குளிரும் பனியா -என்
கண்டாங்கி சேலையிலிருக்கும் அழகா ?

உயிருக்குள் முளைத்த உணர்வா
உணர்வில் சிலிர்த்திடும் உடலா
உடலில் மெருகேறும் காமமா?

எது காதல் என் காதலா?
விடைச்சொல்லாதே
விடியும்வரையிலும்
விடிய விடிய
என் கனவிலே
நீ நீராய் நனைந்துக்கொண்டிரு

அன்றைய கார்விபத்தில்
நீ சடலமாகும் முன்
இந்த அனாதைக்கு
தாரளமாய் கொடுத்த
அந்த

மேலும்

சிறப்பு ............ 02-Apr-2015 9:31 pm
ம்ம்ம் மனதின் அன்பின்ஆழுமையில்... வேறுபாடு அறிய இயலாத உடலின் காம உணர்வும் கட்டுபட்டு... காதலன் மூலம் தன்னை பூர்த்தி செய்துகொள்ள துடிக்கும் உனது உணர்வுகளே... காதல்...!! 02-Apr-2015 9:21 pm
நன்று ....வரிகளில் வலிகள் தெரிகிறது ...தொடருங்கள் .... 02-Apr-2015 6:50 pm
மதன் - அமுதினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2015 12:12 pm

விண்மீண் இரவுகளில்
வினோதனை கண்ட கனவில்
விரவிய காதலில்
விம்பிய காமத்தில்
தும்பிய வெட்கத்தில்
அரும்பிய நாணத்தில்
அவன் ஆண்மையும்
இவள் பெண்மையும்
பண்டமாற்றத்தில்
படுக்கையில்
பரிமாறப்பட்டது.

பெண்மைக்குள் ஆண்மை
வந்தால் காதலாம்
ஆண்மைக்குள் பெண்மை
ஊடுருவினால் காமமாம்
தப்பாய் சொன்ன கவிஞனுக்கு
தலையில் ஒரு கொட்டு.

காதலுக்குள்ளிருக்கும் ஆளுமையே
அது காமம்தான்
காமத்தின் ஆளுமையே
அது காதல்தான்.
இதிலென்ன பிரிவு வேறு ?

மேலும்

அப்படியா துக்கச்செய்தி நட்பே 31-Mar-2015 7:55 pm
காதலுக்குள்ளிருக்கும் ஆளுமையே அது காமம்தான் காமத்தின் ஆளுமையே அது காதல்தான். இதிலென்ன பிரிவு வேறு ? அப்புறம் ...எதுக்கு... சில,,, ஆண்கள்..... பல பெண்கள்... காதல்,,,தோழ்வி கண்டவுடன் .... வாழ்க்கையே முடிந்ததுபோல்... தனியாய் .... வாழ்ந்து ...வருத்தி கொள்கிறார்கள்...!!? .....அந்த காமத்தின் ...ஆளுமையை ...இன்னொரு துணைகொண்டு... பூர்த்தி செய்ய வேண்டியதுதானே...!!? 31-Mar-2015 7:54 pm
மதன் - எண்ணம் (public)
18-Mar-2015 3:54 pm

எங்கோ படித்தது..!!

கவிதை எழுத காதல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை..!
கழுதை மேய்ப்பவன் கூட ..கவிதை எழுதலாம்..!!

உண்மைதான்....
ஆனால்... அந்த காதல் உணர்வு இருந்தால்தான்....
கழுதையை கூட கட்டி பிடித்து கொஞ்ச தோன்றும்..
அந்த பாரதியை.. போல...!!




மேலும்

ம்ம்ம்... . பரவசம் கொண்டோம்... தோழா..!! ..உங்கள்...பரவச கருத்தின்...மூலம்..!..:) 18-Mar-2015 9:28 pm
சொல்லக்கூடிய தருணம். சொல்லக்கூடிய நபர் சொன்னால் அது மிக பரவசம் இல்லையா ? தோழா 18-Mar-2015 9:18 pm
ம்ம்ம்... தாங்கள் ..சொல்லி இருக்க வேண்டியது.....கொஞ்சம்...தாமதமாக இவன் மூலம்... வெளிப்பட்டது அவ்வளவே...!! 18-Mar-2015 9:15 pm
அடேங்கப்பா . பிரமிக்கிறேன் உங்கள் வார்த்தை வீரியத்தில் ...! 18-Mar-2015 6:08 pm
மதன் - எண்ணம் (public)
16-Mar-2015 9:39 pm

எங்கோ படித்தது...!!

பிறர் கஷ்ட படுவதை பார்த்து..
கருணை பிறப்பது கடவுள் குணம்...!
அந்த கஷ்டத்திற்கு..பின்னே
காரணம் தேடுவது மனித குணம்..!!

பட்டவனுக்கு...வலி..!!
பார்கின்றவனுக்கு கேலி..!!

அவன்...வாழ்க்கையில்...
அமைந்த சூழ்நிலையும்...
அப்படிப்பட்ட பெண்ணும்...
ஒருவேளை..
நம் வாழ்க்கையில் அமைந்துதிருந்தால்..
அவனை விட..நாமும்..நன்றாக நடித்திருக்க கூடும்..!




மேலும்

நடிப்பு இருக்கிறது .சிறப்புக்குரிய எழுத்து. 17-Mar-2015 7:24 am
மதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2015 6:47 pm

உலகில்...
குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கு
ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள்...!
உண்மையில்..
என் காதலி குழந்தையாய்
பிறந்தபோது அவள் அழுததிற்கு..
காரணம் ஒன்றே ஒன்று ...
என்னை அருகில் அவள் காணாததே....! @};-

{{ பிகு ... நான் சொல்லவில்லை ... அவள் சொன்னது..!!..}}

மேலும்

Cute கவிதை. கவிதைக்குப் பொய் அழகு. தொடருங்கள். 04-May-2015 7:00 pm
மிகவும் அருமை அனைத்து வரிகளும் செதுக்கிய சித்திரம் 05-Mar-2015 10:14 pm
மதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2015 6:22 pm

ம்ம்ம்...!
நீ எப்படியும் என்னை காப்பாற்ற
ஓடி வருவாய் என்ற நம்பிக்கையில்
காதல் ஒரு "சுவையான விஷம் "
என்று தெறிந்தும் குடித்துவிட்டேனடி...!!
ஆனால் இன்னும் நீ வரவே இல்லையடி.. ஏனடி என் சக்தி..!!?

மேலும்

நன்று தொடருங்கள் 05-Mar-2015 10:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே