வலையில் சிக்காத மீன்கள்
எண்ணம் கடலென பெருகும் பொழுதுகள்
உணர்ச்சிகள் அலையாய் உள்ளத்தை உரசிட
செங்கனி இதழ்களில் வரமறுக்கும் வார்த்தைகள்
வலையில் சிக்காத மீன்களோ
திரைகடல் தேடியும் திரவியம் தேட
மானுடம் மந்தை மந்தையாய் ஓட
கொஞ்சி விளையாடும் பிஞ்சு மழலைகள்
வலையில் சிக்காத மீன்களோ
பணம் இழையாக பின்னல் போட
கையூட்டின் கைகள் பின்னிய வலையோ
நேர்மை மாற நெஞ்சங்கள் சில
வலையில் சிக்காத மீன்களோ...