காமம் உடை
விண்மீண் இரவுகளில்
வினோதனை கண்ட கனவில்
விரவிய காதலில்
விம்பிய காமத்தில்
தும்பிய வெட்கத்தில்
அரும்பிய நாணத்தில்
அவன் ஆண்மையும்
இவள் பெண்மையும்
பண்டமாற்றத்தில்
படுக்கையில்
பரிமாறப்பட்டது.
பெண்மைக்குள் ஆண்மை
வந்தால் காதலாம்
ஆண்மைக்குள் பெண்மை
ஊடுருவினால் காமமாம்
தப்பாய் சொன்ன கவிஞனுக்கு
தலையில் ஒரு கொட்டு.
காதலுக்குள்ளிருக்கும் ஆளுமையே
அது காமம்தான்
காமத்தின் ஆளுமையே
அது காதல்தான்.
இதிலென்ன பிரிவு வேறு ?