இது காதலா என் காதலா - அமுதினி
எந்தன் உயிர் காதலனே
உந்தன் உள்ளத்தில் எரிகிறேனே
சந்தனமாய் தேகத்தில் கரைகிறேனே
வந்தனமாய் காதலில் எழுகிறேனே
இது காதலா.. காதலா ?
நம் காதலா காதலா?
எது காதலா காதலா ?
காதுக்குள் நுழையும் ஒலியா
கானகத்தில் பெய்யும் மழையா
தேன்சிந்தும் இன்னிசை ராகமா
கார்கால குளிரும் பனியா -என்
கண்டாங்கி சேலையிலிருக்கும் அழகா ?
உயிருக்குள் முளைத்த உணர்வா
உணர்வில் சிலிர்த்திடும் உடலா
உடலில் மெருகேறும் காமமா?
எது காதல் என் காதலா?
விடைச்சொல்லாதே
விடியும்வரையிலும்
விடிய விடிய
என் கனவிலே
நீ நீராய் நனைந்துக்கொண்டிரு
அன்றைய கார்விபத்தில்
நீ சடலமாகும் முன்
இந்த அனாதைக்கு
தாரளமாய் கொடுத்த
அந்த முத்தக்கனாவோடு
இன்றும் நீ என்
வானெங்கும் மின்னிகொண்டிருக்க
அதே காதலோடு
அதே காதலுடன்
அதே காதலியாய்
நானாக நானிருப்பேன்
என் காதலா
இது காதலா ?