இன்னும் சற்று நொடிகளில்

இன்னும் சற்று நொடிகளில் சுனாமி வரும்
என்று முன் எச்சரிக்கை தந்திருந்தால் எண்ணற்ற
உயிர்கள் மூச்சடக்கி முழ்கி போய் இருக்கமாட்டார்கள்
இன்னும் சற்று நொடிகளில் பூகம்பம் வரும் என்று
முன் எச்சரிக்கை தந்திருந்தால் மூச்சு திணறி
மடித்திருக்கமாட்டார்கள் ..
இன்னும் சற்று நொடிகளில் காதல் வரும்
என்று முன் எச்சரிக்கை தந்திருந்தால்
எத்தனையே காதலர்கள் காவியமாய் பேசபட்டிருக்க
மாட்டார்கள் ..
இன்னும் சற்று நொடிகளில் உனக்கு மரணம் என்று
முன் எச்சரிக்கை தந்திருந்தால்
மரணத்தை வெல்ல நீ நன்மைகள் செய்திருப்பாய்
இன்னும் சற்று நொடிகளில்
நாளை உலகம் அழியும்
முன் எச்சரிக்கை தந்திருந்தால்
இனம் மொழி மதசண்டைகள் சமதனமாய் போய் இருக்கலாம் ..