புதிய படைப்பாளிகளின் தேடல்

புதிய படைப்பாளிகளின் தேடல் ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நேற்றைய மொத்த கவிதைகள் : 144
இதில் வளர்ந்த , பலரும் அறிந்த படைப்பாளிகளின் பதிவுகள் போக ...
சில நல்ல ...புதிய ...யாரின் பார்வையிலும் படாமல் ...சிறப்பாய் எழுதும் ...படைப்பாளிகளின் முகம் அறிவோம் ...நமது தேடலில் ...
அப்படி ஒரு நல்ல படைப்பாளி பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் ...
படைப்பாளி பெயர் : thaagu ...(கனா காண்பவன் )
வயது : 25 ....
இவரின் நேற்றைய பதிவுகள் :
1. சொற்களற்றவை
காதலென்றால்
என்னவென்று
அப்பாவிடம்
கேளுங்கள்.
உங்களை
சற்றே தள்ளி
மெள்ளச் சாய்ந்து
அம்மாவை பார்ப்பார்.
ஆம்
சில விடைகள்
சொற்களற்றவை.
--------------------------------
2.தலைப்பிடவில்லை ....(கவிதை எண் : 233329.)
3.காண்பாயோ ....(கவிதை எண் : 233328 )
4.ஒருத்தின் முகம் ..(கவிதை எண் : 233325 )
வார்த்தைகளை கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது ...
ஏறக்குறைய 250 பதிவுகளை தந்துள்ளார் ....ஆனால் பலரின் பார்வையில் படுவதே இல்லை ...
இவரின் முந்தைய பதிவுகளை படித்து பார்க்கையில் ...இவரை இத்தனை நாள் எப்படி காணாமல் இருந்தோம் என்றே தோன்றியது ...வார்த்தை வளமிக்க இவரின் பதிவுகள் ரசனை மிகுந்தவை ...நிகழ்வுகளை கண் முன் நிறுத்துகிறார் ....
இவரின் ...பிற சில பதிவுகள் ..
தேவையறுக்கும் சில மெளனங்கள்
நிசப்த சுவை
உடைந்த ஏகாந்தம்
கரைபுரண்டு ..
துயிலேழை
என அனைத்து பதிவுகளும் எனை அதிகம் ஈர்த்தன ..
நேற்று ...இவரை தவிர இன்னும் சில நல்ல பதிவுகள் இருந்தன ..
அவை ...
பெயர் மாற்றுங்கள் - அன்புடன் மல்லிகா - கவிதை எண் : 233363
நிலா - ஜெயந்தி - 233417
திருப்தி - ஜெயந்தி - 233410
அழியாத உயிருள்ள கனவு - உதயகுமார் - 233416...
எதிர்பாரா தருணங்கள் - ஜெயந்தி - 233424 ..
இவர்களின் கவிதையை ஒரு முறையாவது படித்து பாருங்கள் ...
இவர்களின் எழுத்து மிக சிறப்பு ...இணைந்து செயல்பட்டால் பல மாற்றம் தரலாம் ...
இவர்களை நட்பாக்கி கொள்வோம் ...தமிழால் இணைவோம் ...
அன்புடன்
இராஜ்குமார்