காலம் கனிவது எப்போது

..."" காலம் கனிவது எப்போது ""...

உனக்கும் எனக்குமான போர்
இல்லையென்ற இலைமறை
பொய்யைவிடவும் ஆம்மென்ற
நேர்முறை என்றும் பிடிக்கும் !!!

வாதம் செய்தால் நல்லதொரு
வாய்மையும் பிறக்கலாம்
விதண்டா வாதத்திலென்றும்
விபரீதங்களே முளைக்கும் !!!

கடிவாளமில்லா குதிரையின்
ஓட்டம்போல் கட்டுக்கதை
கட்டவிழ்ந்த காரணத்தால்
மொட்டுக்களில் மோதியே !!!

பெரும் காயங்களாகின
சிட்டுக்கள் தேகம்தொட்டு
தேனருந்தி சென்றபின்னால்
கற்ப்பிழந்த பூவானேன் !!!

பொருத்தது போதுமென்றே
பொங்கியே எழுந்துவிட்டேன்
மென்மையும் பெண்மையும்
தன்மைதனை தவறவிட !!!

இல்லறத்தின் சாட்சிகள்
இரட்டையான கீர்த்திகள்
இரத்தைத்தை பிரித்துவைத்து
இறப்புமிங்கு வேடிக்கைபார்க்க !!!

விஷம் தடவிய கத்தியால்
இழப்புக்கள் அதிகம்தான்
உனக்காகவும் இருக்கலாம்
எனக்காகவும் இருக்கலாம் !!!

வஞ்சகமான வார்த்தைகளால்
வலுவிழந்துவிட்ட இதயமும்
அடிவிழுந்த மனதும் வலியை
தாங்கியே மரணித்துவிட்டது !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (15-Feb-15, 3:45 pm)
பார்வை : 239

மேலே