இன்னும் சற்று நொடிகளில் - கவிதைப்போட்டி முடிவுகள்

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம்...


உண்மைலேயே இது நமக்கு ஒரு இனிய மாலைப் பொழுதாகத் தான் அமைந்து விட்டது இன்று நண்பர்களே... அதி விரைவாக மிகப் பரபரப்பாக நடைபெற்று இப்போது நல்லபடியாக நிறைவு பெற்று இருக்கிறது 'இன்னும் சற்று நொடிகளில்' என்னும் இந்தக் கவிதைப் போட்டி...


போட்டியில் பங்கேற்ற கவிதைகளுக்கான , இரண்டு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு , போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பற்றிய முடிவுகள் என் கைகளில் இருக்கும் இந்த வேளையில் , முடிவுகளை அறிவிப்பதற்கு முன் சில விஷயங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன் நண்பர்களே...


ஒரு எண்ணம் , நம் மனதில் அதுவாகவே தோன்றுவதற்கும் , தோன்றிய எண்ணத்தை அப்படியே மறைந்து போக விட்டு விடாமல் , அதை முழுமையாக செயல்படுத்திப் பார்ப்பதற்குமான வித்தியாசத்தை இன்று முழுமையாக உணர்ந்தேன் நண்பர்களே...


ஆம்.... சட்டென்று ஏதோ ஒரு நொடியில் தோன்றியது ,


'ஒரு கவிதைப் போட்டியில் , போட்டிக்கான தலைப்பு கொடுக்கப்பட்டவுடன் கவிதை எழுதப்பட்டு , உடனுக்குடனே முடிவுகளும் அறிவிக்கப்பட்டால் எப்படி இருக்கும்' என்று... அடுத்தடுத்த நாட்களிலேயே அப்படி ஒன்று நடந்து முடிந்தும் விட்டது இன்று...


இந்த இனிய வேளையில் நான் பலருக்கு என் நன்றிகளைத் தெரியப்படுத்த மிகவும் கடமைப் பட்டுள்ளேன் நண்பர்களே...



நடுவர்கள்......

'இப்படி ஒரு போட்டி நம் தளத்தில் நடத்த விரும்புகிறேன் .. தாங்கள் நடுவராக செயல்புரிந்து கவிதைகளைத் தேர்வுகள் செய்து கொடுக்க வேண்டுகிறேன்' என்று நான் கேட்டுக் கொண்ட மறு நொடியே 'அவசியம் செய்து கொடுக்கிறோம்' என்று ஏற்றுக் கொண்டு , இத்தனை குறைவான நேரத்தில் இரண்டு கட்டத் தேர்வுகள் நடத்தி வெற்றி பெற்ற கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்தார்கள்...


நடுவர்களின் துணை இல்லாமல் இப்படி ஒரு போட்டி நடப்பதும் , இத்தனை சீக்கிரம் முடிவுகள் அறிவிக்கப் படுவதும் நிச்சயம் சாத்தியமே இல்லாத ஒன்று நண்பர்களே... முழுக்க முழுக்கவே நடுவர்களாலான போட்டி இது... இத்தனை விரைவான பணியை இத்தனை சிறப்பான முறையில் செய்து கொடுத்த நடுவர் குழுவிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...


ஒரு போட்டியின் சுவாரசியம் , அந்தப் போட்டியின் நடுவர்கள் யாரென்று போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியாமல் இருப்பதில் தான் அடங்கி உள்ளது என்று நான் முழுமையாக நம்புகிறேன் நண்பர்களே... அதனால் , இந்தப் போட்டியில் நடுவர்களாக செயல் பட்டவர்கள் யாரென்பதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறேன்...


அடுத்து , போட்டி அறிவிக்கப்பட்ட மறுதினமே போட்டி , குறிப்பிட்ட கால அவகாசம் மட்டுமே போட்டிக்குரிய நேரம் என்று விதிமுறைகள் இருப்பினும் , தங்களின் முழு ஆதரவினையும் பங்களிப்பையும் முழுமையாகக் கொடுத்த , தோழர்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லாமல் எப்படி இருப்பேன் நண்பர்களே...


ஆம் நண்பர்களே... இந்தப் போட்டி , தங்கள் அனைவரின் ஊக்கமும் ஆதரவும் இல்லாமல் இத்தனை சிறப்பாக நிறைவு பெற்று இருக்க வாய்ப்பே இல்லை... போட்டியில் இவ்வளவு ஆர்வமாக பங்கு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் , போட்டியில் பங்கு பெறாவிட்டாலும் தொடர்ந்து ஊக்கம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி....


பரபரப்பாக நடந்து முடிந்து இருக்கும் இந்த 'இன்னும் சற்று நொடிகளில்' கவிதைப் போட்டியின் முடிவுகளை இப்போது அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் நண்பர்களே...


போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு :


முதல் பரிசு- தோழர் குமரேசன் கிருஷ்ணன்

இரண்டாம் பரிசு - தோழர் சரவணா

மூன்றாம் பரிசு - தோழர் சுசீந்திரன்


இவற்றோடு மட்டும் இல்லை நண்பர்களே... போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கவிதைகளுமே அதனதன் தனித்தன்மையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது... அதனால் , முதல் மூன்று பரிசுகளோடு இணைந்து நடுவர்கள் இன்னும் மூன்று போட்டியாளர்களின் படைப்புகளை ஆறுதல் பரிசு பெற்ற கவிதைகளாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்...


ஆறுதல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் விபரங்கள் பின்வருமாறு :


முதல் ஆறுதல் பரிசு - தோழர் சியாமளா ராஜசேகர்

இரண்டாம் ஆறுதல் பரிசு - தோழர் அ. வேளாங்கண்ணி

மூன்றாம் ஆறுதல் பரிசு - தோழர் மெய்யன் நடராஜ்


வெற்றி பெற்ற அனைத்து தோழர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...


தொடர்ந்து ஆதரவு கொடுத்து போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...


மீண்டும் இது போல் இன்னுமொரு இனிய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைவோம் நண்பர்களே...


நேசத்துடன்
கிருத்திகா தாஸ்

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (15-Feb-15, 3:59 pm)
சேர்த்தது : கிருத்திகா தாஸ்
பார்வை : 292

மேலே