இன்னும் சற்று நொடியில் -காக்கை சிறகினிலே ஒருதாயின் அன்பு

"தொட்டு வணங்க தெய்வத்தை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
பேசி விளையாட உறவு பந்தங்களை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
உள்ளிருக்கும் துக்கத்தை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
உடம்பில் வலியை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
இந்த உலகத்தை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
அடுத்த பிறவியை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
உன் கண்ணில் கண்ணீரை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
உன் இதயத்தின் வலியை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
பிறரின் காதலை எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
ஏனடா!!!!!!!!உன் மரணத்தையே இனிமேல் எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
உலகத்தில் தலைச் சிறந்த வார்த்தையை இனிமேல் எதிர் பார்க்காதே
உன் தாய் அருகில் உள்ளபோது!
BY
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL
VTHT
AVADI
CHENNAI...............