கேட்டுச்சே கேட்டுச்சே

"ஏன் தம்பி.... வீட்ல நேத்து ராத்திரி சட்டி பானை உருள்றது மாதிரி சத்தம் கேட்டுச்சே..?"


"அது ஒண்ணுமில்ல பெரியவரே... ரெண்டு மூணு பூனை வீட்ல சுத்திகிட்டு இருக்கா.... அதுகதான்...."


"இல்லையே....திடும் திடும்னும் சத்தம் கேட்டுச்சே.....!"


"அதுவா.... நானும், வீட்டுக்காரியும் மானாட மயிலாட டான்சுக்கு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம்..."


"இல்லையே......வேண்டாம்மா...வேண்டாம்மா....வெளிய தெரிஞ்சா கேவலாமாகிடும்னு அழுதுகிட்டே சொன்னா மாதிரி சத்தம் கேட்டுச்சே....!"


"யோவ்.... அதான் தெரியுதுல்ல....அப்புறம் என்ன "கேட்டுச்சே.. கேட்டுச்சே"ன்னு கேள்வி மேல கேள்வியா கேட்டு வெந்த புண்ணுல வேல பாய்ச்சுற......பேசாம போவியா...!

எழுதியவர் : உமர் ஷெரிப் (17-Feb-15, 2:09 am)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே