பெண்ணே விழித்திடு

(அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் எனது தங்கை கி. பொன்னரசி எழுதிய கவி இது , அவளின் டைரியில் இருந்து அவளின் அனுமதியுடன் உங்கள் பார்வைக்காக )
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணே விழித்திடு...!
புதிதாய் பிறந்திடு ..!

உன் உணர்வால்
உழைப்பால் உயர்ந்திடு ...

கண்ணே கல்வியாம் கற்றிடு
உன் வாழ்க்கையில் கடுந்துயர் தவிர்த்திடு ...

முயற்சி முதலாய் வளர்த்திடு
முடியாமையை உடைத்திடு

உயிராம் ஒழுக்கம் காத்திடு
உனக்கு புகழுண்டு புரிந்திடு

துக்கம் வந்தால் துணிந்திடு
அச்சம் அதனை அணைத்திடு

வெட்கம் வந்தால் வென்றிடு
வெற்றி நிச்சயம் உணர்ந்திடு

புன்னகை பூவாய் பூத்திடு
புதியன யாவும் படைத்திடு

இலட்சிய பாதையில் சென்றிடு
குறிக்கோளால் அதை செதுக்கிடு

எண்ணிய படியே உழைத்திடு
உலகம் போற்ற உயர்ந்திடு

பாரதி பெண்ணாய் வாழ்ந்திடு
பார் உன்னை போற்றிடும் பார்த்திடு

பெண்ணே விழித்திடு ...!
புதிதாய் பிறந்திடு ...!

----------------------------------------------------------------------------------------------------------------------------
(என் தங்கையின் கவியினை இங்கு பதிவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் )

குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : பொன்னரசி (17-Feb-15, 6:43 am)
பார்வை : 454

மேலே