மரித்திடாத மரணம் நீ
மரித்திடாத மரணம் நீ.....!
உன் சாவிற்கு...
இங்கே -
சாவில்லை தோழா...!
மூளை நோய்
படைத்தோரிடையே
நீயோ -
மூளைச் சாவுற்றாய்...
என்ற -
ஈரக் குலையரிந்த
செய்தி கேட்டும்...
உன்னை -
வாரித்தந்த
' வள்ளல் ' சுற்றத்தை...
வையகமிங்கு -
வணங்காதிருக்காது....
எனவே -
உன் சாவிற்கு...
இங்கே -
சாவில்லை தோழா...!
ஆம்...,இன்று -
மானுட உயிர்களுள்....
நுரையீரல் சுவாசமாய்..!
துடிக்குமிதயமாய்...!
விழிக்கும் விழிகளாய்..!
காக்கும் கணையமாய்..!
கல்லீரல் அவையமாய்..!
கருதுதற்கரிய -
அறிவியல் நுன்மையின்
உண்மையாய்....!
நொடிகள் தோறும்
நீளும் உன் வாழ்வில்.....
என்றென்றும் -
உன் சாவிற்கு...
இங்கே -
சாவில்லை தோழா...!