சமுதாய சிதறல்கள்-- அரவிந்த்

சாலை ஓரம்
கந்தல் உடுத்திய பணக்காரன்
காக்கி அணிந்த பிச்சைக்காரன்..!
சட்டசபையில்
சட்டைகள் கிழிப்பு
நிர்வாணமாய் என் தேசம்..!
விற்றுபோன வாக்குறுதிகள்
விற்றவன் வாழ்கிறான்
வாங்கவேண்டியவன் இறக்கிறான்..!
நடிகரின் படத்திற்கு பால் அபிஷேகம்
தாகத்தில் பச்சிளம் குழந்தைகள்
அனாதை இல்லங்களில்..!
விலைவாசி உயர்வு
விலை பட்டியலை பார்த்து
நிறைந்து போன வயிறு..!
ஆபாசத்தை ஒழிப்போம்
அரைகுறை ஆடையில் போராடும்
சிங்காரிகள் சிலர்..!
மதுவிலக்கு
அமல்படுத்த ஆர்ப்பாட்டம்
அரைமயக்கத்தில் அரசியல் பிரமுகர்கள்..!
காமம் இல்லா காதல்
கடற்கரை ஓரம்
படகுகளின் நிழல்களில்..!
நாளைய எதிர்காலம்
விரைவாக வருகிறது
மாநகர பேருந்தின் படியில் நின்று..!
#என் சமுதாய சிதறல்கள்#