தங்கை
பத்து வருடம் முடிந்துவிட்டது, தங்கையின் திருமணம் முடிந்து அவளுக்கும் இரு பிள்ளைகள் பிறந்தாச்சு, யாழினிக்கு எதுவும் புரியவில்லை. தங்கையின் திருமண நேரத்தில் ஏற்பட்ட சின்ன சின்ன மனகசப்புகளை காரணங்களாக சொல்லி யாழினியின் கணவன் இனி தங்கையுடன் பேசவே கூடாது என சொல்லியவுடன் சரி என தலையாட்டியது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை இப்பொழுது உணர்கிறாள்...தன் கணவனை தாண்டி எதுவும் செய்ய இயலாத நிலையில் தன் அம்மாவிடம் பேச நினைத்தாள்...
அம்மாவுடன் பேசிய யாழினி தன் குடும்ப சூழ்நிலையை சொல்லி அழுதாள்..எப்படியாவது தன் கணவனை வெளியூருக்கு ஒரு வேலைக்கு எடுத்து கொள்ள தங்கையிடம் மறக்காமல் சொல்லும்படி சொன்னாள்..யாழினியின் தங்கை கணவர் வெளியூரில் நல்ல கம்பெனியில் நல்ல நிலையில் இருப்பது அவளுக்கு ஏதோ தெம்பாக இருந்தது...தான் அம்மாவிடம் கூறிய தகவல் தங்கையிடம் சேர்ந்தால் நிச்சயமாக அவள் எாவது செய்து தன் குடும்ப சூழ்நிலையை மாற்றிவிடுவாள் என யாழினி நம்பினாள்...
அவளின் நம்பிக்கை வீண் போகவில்லை, யாழினியின் செய்திகள் அனைத்தும் அவளது தங்கையின் காதுகளுக்கு சேர்ந்தது...
ஒரு மாதம் ஓடியதே தெரியாத ஒரு நாள் யாழினியின் கணவன் தான் வெளியூருக்கு வேலைக்கு போவதாகவும் , உடனே கிளம்ப வேண்டும் என்றான்...யாழின்யின் கணவன் வெளியூர் சென்ற மூன்றாவது நாள் அவளது தங்கை பத்து வருடங்களுக்கு பிறகு போன் செய்து பேசினாள்...
ஆயிரம் பிரச்சனைகள் என்றாலும் பாசம் மாற போவதேயில்லை...உடன்பிறந்தவளின் க்ணீர் துளிகளை கேட்க முடியாமல் தன் திரமேணத்திற்கு பின் தன் வாழ்க்கையில் இடம் பெறாத ஒரு உறவிற்காக உதவி செய்து தன் பெருமையை நிலைநாட்டி கொண்டாள் யாழினியின் தங்கை...
வெளியூர் வந்து கொலுந்தியாவின் வீட்டில் மூன்று மாதம் தங்கியிருந்து தன் சகளையின் அயராத உழைப்பையும், அவருடைய செல்வாக்யைும் பார்த்த யாழினியின் கணவருக்கு தன் எதிர்காலத்தை விட பொறாமை குணம் பெரிதாக வளர்ந்திடவே வேலையை விட்டுட்டு இந்தியா திரும்பினார்....
வாழ்க்கையில் பொறாமையும் , எதிர்பார்ப்பும், போட்டியும் என்றுமே நல்ல நிலையில் வாழ விடாது என்பதை யாழினி புரிந்து கொண்டாள் என்று அவளது கணவனுக்கு புரியும் என்பது தெரியவில்லை...