விழியோரம் வழியும் நீர்த்துளிகள் 555
என்னுயிரே...
வருடந்தோறும் நான்
எழுதும் டைரிகள்...
உன்னை கண்டதும் நான்
எழுதிய கவிதை கிறுக்கல்கள்...
உன்னை நேசித்த போது
கொடுக்காமல் மறந்த
காதல் கடிதங்கள்...
நண்பர்களோடு கண்டுகளித்த
சினிமா டிக்கெட்டுகள்...
அப்பா எனக்கு முதன் முதலில்
வாங்கி கொடுத்த...
காகித குச்சியின்
மிச்சம்...
தாத்தா இறக்குமுன் எனக்கு
கொடுத்த இருபது பைசா...
அக்கா எனக்கு போட்டு
அழகு பார்த்த...
வெள்ளி கொலுசில் உதிர்ந்த
ஒற்றை முத்து...
என்னைவிட்டு நீ
சென்றபின்பும்...
உனக்காக நான் எழுதிய
கிறுக்கலான கடிதங்கள்...
சில நேரங்களில் என்
மனபக்கத்தை புரட்டி பார்கிறேன்...
உன் நினைவுகளோடு
சில நினைவுகளையும்...
பொக்கிஷமான நினைவுகளால்
விழியோரம் வழிகிறது...
பல நீர்த்துளிகள்.....

