என் குழந்தை
நெஞ்சுக்குள் நான் வரைந்த சித்திரமே
இரத்தத்தில் ஈன்றெடுத்த இரத்தினமே
கண்ணுக்குள் பொத்தி வைத்தப் பொற்குடமே
தொட்டிலிட்டுத் தாலாட்டி தளரும்போது
பனியாக புன்சிரித்து புத்துயிர்த்தாய்
நடுநிசியில் கண்விழித்து சோர்ந்திருந்தால்
தளிர் கையால் தீண்டி எனை நெகிழ வைத்தாய்
பள்ளி செல்லும் நேரத்தில் என் புடவை பற்றி
நீங்காதே என்றழுது என் கண்கள் நிறைத்தாய்
ஓர் ஓரத்தில் நான் நின்று ரசித்திடவே
பரிசுகள் பல வாங்கி பெருமை குவித்தாய்
தளர்ந்து விட்ட வயதினிலே
தூக்கமின்றி நான் தவிக்க
உன் புன்சிரிப்பும் ..தளிர் கரமும்
ஏக்கமாய் எனைத் துளைக்க
கனவில் நான் செதுக்கிவைத்தக் கற்சிலையே
நினைவு விட்டு நீங்காத நித்திலமே
மனம் நிறைந்து மணம் வீசும் மல்லிகையே
வினையாற்றச் சென்றவளே(சென்றவனே )
வழி மீது விழி வைத்துக் காத்திருப்பேன்
துயர் நீக்க விரைந்தோடி வந்திடுவாய் ,,,
by Dr.A.P.SathyaSwaroop.

