இனிஒரு விதி செய்வோம்

கணவனையிழந்த உன்நிலை கண்டு
தரித்திரம் என்றழைத்தவ ரிடையே
தனித்திறம் கொண்டு எழுந்துவா
சரித்திரம் நீ ! படைக்கலாம்
ஓட்டைக் கப்பலென ஒதுக்கியவரிடையே
நீர்மூழ்கி கப்பலென நீந்திசாதிப்போம்
மூழ்கும் தனித்திறன் நமதென்று
கைம்பெண்னின் கனவுகள் கைசேர...
மறுமண மாற்றங்கள் நிறைவேற..
இனிஒரு விதி செய்வோம்

(நண்பர் தந்த தலைப்பில் இவ்வரிகள் ).

எழுதியவர் : moorthi (28-Feb-15, 11:46 am)
பார்வை : 153

மேலே