அமில வீச்சு

மாலையிட மறுத்த
மலரொன்று
வதைபட்டு
வாடுவதென்ன விதியோ

வற்புறுத்தி வரவழைக்க
கட்டாயத்தில் நிா்பந்திக்க
காதலொன்றும்
கணிதப்பாடமல்லவே....

உன் உணா்வுக்கு
உடன்படாமல்
உயிருள்ள மலரொன்று
உருக்குலைந்து போனது

உயிரற்ற
உன்னுடைய காதல்
சிதைந்து போன
முகத்தில் தானே...

அகவழகை நேசிக்காத
அா்ப ஆகிருதி
அவளுன்னுள் இருக்கிறாள்
என்றென்னினால்

அமிலம் வீச மனம் வருமோ

மடையனே உனை

வசைபாட வாா்த்தையில்லை

எழுதியவர் : ஹஸீனா அப்துல் (1-Mar-15, 6:18 pm)
Tanglish : amila veechu
பார்வை : 214

மேலே