வீரத்தின் முனகல்கள் -ரகு
கொஞ்சம் தீர்க்கமாகவே
இழையோடும் பழமைவாதம்
இன்னும் கொலுசுச் சத்தங்களைப்
பத்திரமாகவேப் பாதுகாக்கிறது
அடுப்படிகளில்
கைபிடித்துக் கூட்டிவரும்
நூற்றாண்டுகள்
நாகரிகம் பறைசாற்றி
ஆணுக்குநிகரென்று
அரைக்கூவலிட்டாலும்
தோலுக்குப் பின்னாலின்னும்
ஏங்குகிற விழிகள்
இன்றளவும் மறுப்பிலா நிதர்சனம்
முறத்தால் அடித்த
வீரத்தின் முனகல்கள்
முக்குக்கு முக்கு
கேட்டுக்கொண்டிருக்கும்
நிலையில்
தடித்த இரவுகள்கூடக்
குரூரமாகவேக் காத்திருக்கிறது
தனித்துவரும் பூவாசனைக்கு
எல்லா உரிமைகளும்
வாங்கிய வளையலோசை
சிறகுகள் விரிந்ததென
சிலாகித்தென்ன பயன்
விற்பனையில்தான்
இருக்கின்றன இன்னும்
விதவிதமானக் கூண்டுகள்