அவனுக்காக சமைக்கப் பட்ட உணவு

**அவனுக்காக சமைக்கப்பட்ட உணவு***


வெளிநாட்டில் உணவு விடுதிகளில் வெந்துப்போன அவனுக்காக சமைக்கப்படும் முதல் உணவு...

சமைக்கத் தெரியாத என்னை மனமகிழ்ச்சியோடு கூட்டிச் செல்கிறது கால்கள் சமையலறைக்குள்....முதலில் அரிசியை எடுத்தேன் அது ஆனந்தமாய் துள்ளிக் குதித்தது பாத்திரத்திற்குள் அவனுக்காக....

அடுத்து தண்ணீர் தானாய் முன் வந்துக் கேட்கிறது அவனுக்கான சமையலில் என்னையும் சேர்த்துக் கொள் என்று...

அடுத்து மசாலாப் பொருட்களை அளவாய் எடுத்தேன்...
அது ஏக்கத்துடன் என்னைப் பார்க்கிறது "எதற்கும் மயங்காத உன்னவன் என்னால் மயங்குவானா????" என்றுஇவ்வாறு பக்குவமாய் பாசத்தில் உருவான உணவு என்னால் பரிமாறப்படுகிறது...


அதை ருசித்த அவன் உன்னைப் போலவே இந்த உணவும்..
இனிப்பால் சிரிப்பு,
காரத்தால் முறைப்பு,
நாணத்துடன் புளிப்பு,
உனக்கு பிடிக்காத என் கசப்பு...

என அனைத்தும் கலந்து உன் உணவு(உன)க்கும் என்னை அடிமைப் படுத்துகிறது என்றான்..........................

எழுதியவர் : கீர்த்தனாஜெயராமன் (1-Mar-15, 7:25 pm)
பார்வை : 124

மேலே