குடும்பத் தலைவி

தன்னிகரில்லாக் குடும்பத் தலைவி
அமர்ந்த அழகே தனி அழகு
அடுப்பின் வண்ணம் எடுப்பின் உறுதி
அடுக்களை அமைப்பே
உள்துறை வித்தகம்
பாண்டங்களின் பண்போ
ருசியைக் கூட்டும்
அவள் காந்தள் விரல்களோ
வடிவியல் காம்பஸ்
சுடும் சப்பாத்தியோ
பூரண நிலவு
எத்தனை வட்ட நிலா
உள்ளே சென்றாலும்
இன்னும் கேட்கும்
அப்படியொரு கைப்பக்குவம்
அன்புடன் பரிமாறும்
இவர்கள் இல்லையேல்
மானுடம் தான்
எங்கே போகும்

எழுதியவர் : ரமணி (1-Mar-15, 6:17 pm)
பார்வை : 202

மேலே