என்னவளே-தொடர்கதை
என்னவளே-தொடர்கதை
பகுதி -7
மாலை 4 மணி வையாபுரி தனக்கு தெரிந்த புரோக்கர் மூலமாக வந்த வரனுடன் வந்து சேர்ந்தார் .ராஜலக்ஷ்மி அம்மாள் பட்டு புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூ வைத்து அம்பாளாகவே காட்சி அளித்தால்.கல்பனா வேண்டா வெறுப்பாக அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். வையாபுரி ஹாலில் அனைவரையும் பாயில் அமர செய்து ராஜலக்ஷ்மி அம்மாவிற்கும் ராமைய்யா பிள்ளைக்கும் வரனை அறிமுகப்படுத்திக் கொண்டுருந்தார்.அம்மா இவர் தான் சக்ரவர்த்தி நம்ம L & L கம்பெனியில் C . E .O வா இருக்காரு இது அவரோட அக்கா மாமா என்று வந்தவர்களை சுட்டிகாட்டி கொண்டிருந்தார் .ராஜலக்ஷ்மி அம்மாள் அனைவரையும் பார்த்து கை கூப்பி ஏம்ப்பா அம்மா அப்பா வரலையா என்றாள். இல்லங்க ஆண்டிஎங்க வீட்ல எல்லாமே எங்க அக்கா முடிவுதான் என்றான் சாந்தமாக. அக்கா மஞ்சு மாமா மாணிக்கம் நல்ல பொருத்தத்துடன் இருந்தனர் . பொண்ண வர சொல்லுங்க பார்த்துட்டு கிளம்பணும் வெளியில கொஞ்சம் வேலை இருக்கு என்று அவசர படுத்தினான் சக்ரவர்த்தி .இதோ என்றவாறு ராஜலக்ஷ்மி அம்மாள் உள்ளே சென்று கல்பனாவை அழைத்து வந்தாள்.கல்பனா ஆரஞ்சு நிறத்தில் செல்ப் பார்டர் வைத்த பட்டு புடவை தலையில் கனகாம்பரம் என்று அதி அழகியாகவே காட்சி அளித்தால்.
மஞ்சு அவளிடம் நீ எங்கம்மா வேலை பார்க்கிற என்றாள் .நான் முத்தையா தெருவில் உள்ள சுகர் மில்லில் அதிகாரியா வேலை பார்கிறேன் என்றாள் . வேலை பளு அதிகமா இருக்குமோ என்றார் மாமா மாணிக்கம் .ஆமா மாத கடைசில மட்டும் கொஞ்சம் அதிகம் மத்த படி ஈஸி தான் என்றாள் கல்பனா .சக்ரவர்த்தி C E O மிடுக்குடன் அவளை பார்த்தும் பார்காதவனாய் அமர்ந்திருந்தான் .அனைவரும் பலகாரம் காபி அருந்தி மகிழ்வுடன் விடை பெற்று சென்றனர் .அவர்கள் வெளியேறியவுடன் வையாபுரி ராமைய்யா காதில் நான் விசாரிச்சு சொல்றேன் வரட்டுமா என்றவாறு ராஜலக்ஷ்மி அம்மாவிடம் சில மைசூர்பா கேட்டு பாக் செய்து வீட்டிற்கு எடுத்து சென்றார். ராஜலக்ஷ்மி அம்மாள் சக்ரவர்த்தியை தனது மருமகனாகவே எண்ணி பூரித்து போனாள்.அவர்கள் வெளியேறிய பத்தாவது நிமிடத்தில் போன் அலறியது .ராஜலக்ஷ்மி அம்மாள் ரிசிவரை எடுத்தாள் போன் துண்டிக்கப் பட்டு விட்டது . மீண்டும் போன் அலறியது ராஜலக்ஷ்மி அம்மாள் கடுப்புடன் ரிசிவரை எடுத்து கீழே வைத்தாள்.
----------------------தொடரும் -----