அடைமழை
உனக்காக நான் கோர்த்த நிமிடங்களை
உனக்கு பரிசளிக்கலாம் என்றால்
இந்த அடைமழைக்கு ஏன்
உன் மீது பொறாமை
எல்லா நிமிடங்களையும்
அதின் சாரலால் என்னை
மூழ்கடித்துவிட்டது
என் நினைவுகளில் வரும்
உன் சாரலை விட
இந்த மழையின் சாரல்
என்னை ஜெயித்துவிட்டது