உயிரோடு உயிராக
என்றும் உன்னை என்
பார்வையில் இருந்து மறைய மறுக்கிறேன்
என்றும் உன்னை என்
இதய அறைக்குள் பூட்டி வைக்கிறேன்
என்றும் உன்னை உன்
பெயரை என் பெயரோடு எழுத நினைக்கிறேன்
என்றும் உன்னை என்
சுவாசத்தோடு சுவாசமாக கலக்குகிறேன்
என்றும் உன்னை என்
மௌனத்தோடு மௌனமாய் மறைகிறேன்
என்றும் உன்னை என்
தனிமையோடு தாலாட்ட தேடுகிறேன்
என்றும் உன்னை என்
உயிரோடு உயிராக வைக்கிறேன்