அந்தநாள் காதல்
சிவிகை ஊர்கோலம் போவோமா
குறுநகையில் குதுகலம் காண்போமா
நிலவைவரசொல்லி குளிர்வோமா
நில்லாமல் காதல் புரிவோமா
மலரின் தேனை உண்போமா
இதழில் மயங்கி கிடப்போமா
பணியை போர்த்திகொள்வோமா
படர்ந்து இருவர் ஒருவர் ஆவோமா
எதுகை மோனை படிப்போமா
இடையினில் இன்னிசை புரிவோமா
வல்லினம் மெல்லினம் இணைப்போமா
புதிதாய் புதினம் படைப்போமா

