படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்

படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்...!!!!!!!!!

பசித்தவரெல்லாம் ருசித்திருக்க
பாவம் என் பாமரன்
பசியில்நிற்கிறான்
ஒரு ஓரமாய்...!

பணம் படைத்தவன்
"ஒன் மோர்” என்று கேட்டதால்.

இவனுக்கும் சேர்த்து
அவன் தின்கிறான்..!

அவனுக்கும் சேர்த்து
இவன் உழைக்கிறான்...!

இவன் உழைப்பிற்கும் சேர்த்து
அவன் சம்பாதிக்கிறான்...!

அவனுக்கும் சேர்த்து
இவன் வரி செலுத்துகிறான்...!

வந்த சலுகைகளை
பாதிய கொடுத்தாக்கூட
பரவாயில்ல பாவி

முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா
முடியாதவங்கர போர்வையில...!

காரணம்.......??

கூட்டமாகவும்,சத்தமாகவும்
சொன்னாத்த எதுவும் சாத்தியமாகும்...!

இது படிக்காத பன்றிகளுக்கு
தெரிஞ்சிருக்கு...!

அங்கங்க கூட்டம் போட்டு
அவசியமில்லாதத கத்தி கத்தி
சட்டத்த சாதகமா மாத்திகரானுங்க..!

படிக்காத பாட்டளிக்கு தெரியல
படிச்ச பட்டதாரிக்கு தெரியல
பண்ணி கத்தறத பாவமா
பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்..!

சிலர் வேடிக்கையாக பார்க்கிறார்கள்...!
பாமரன்..பா.பரத்

எழுதியவர் : பா.பரத் குமார் (5-Mar-15, 5:56 pm)
பார்வை : 567

புதிய படைப்புகள்

மேலே