இது தான் காதல்

கடைசிவரை காப்பாற்றுவான் என்று தன் கருவறையில் சுமந்தவளையும் விட்டு!!!!!! (அம்மா)
கை பிடித்து கரை ஏற்றிவிட்டால் என் கனவுகளையும் நிஜமக்குவான் என்றவரின் எதிர்பார்ப்பையும் விட்டு!!!!!(அப்பா)
என் வாழ்கை முழுவதும் உன்னோடு மட்டும் தான் என்று உறவாய் வந்தவளையும் விட்டு !!! (மனைவி )
என் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே வாழ்ந்து போனதிற்கு சான்றளிக்க வந்தவர்களையும் விட்டு !!!(குழந்தைகள்)
எங்களுக்கொன்று என்றால் இமையம் போல தாங்கும் துணாய் இருப்பான் என்றவர்களையும் விட்டு !!!( சொந்த பந்தம் )
நான் இங்குவந்து நிற்பது என் தாய்நாட்டின் மீதுடைய தீரா காதலே!!!!

எழுதியவர் : manikandan (6-Mar-15, 9:05 pm)
சேர்த்தது : மனிகண்டன்1987
Tanglish : ithu thaan kaadhal
பார்வை : 140

மேலே