அன்பும் அம்பும் - நகைச்சுவைப் பார்வையில்

தனிமையாக இருக்கும்போதே
தாரைத்தாரையாகக் கண்ணீர்-
துடிக்கின்ற மனதோடு
 
அடித்ததுயார்..? என்றேன்
அமைதியி லொருபார்வை
அழும்நீர் துடைக்காமல்.
 
உன்னையும் அழவைத்தவன்
உலகிலின்னும் இருக்கானா?
உரக்கமாய் நான்கேட்க
 
உலறாதே யெனச்சொல்லி
உரித்தது வெங்காயமென
உரைத்ததும், வொருகேள்வி
 
“வெங்காயம்”யார்..? என்றது,
வெகுளியா யெனைப்பார்த்து-
வொதுங்கியே வோடென்று..!
 
அப்பாடா... தப்பிச்சோமென..
ஹ.. ஹா.. ஹா...

-|- Rocking Jack -|-

எழுதியவர் : ஜாக் .ஜெ .ஜி (8-Mar-15, 3:00 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 89

மேலே