மகளிர் தினத்தில் நான் பாடும் பல்லாண்டு
என் அன்னை என்னைப் பெற்றவள்
இன்று இவ்வுலகில் இல்லை -எனினும்
''
என் மனதில் என்றும் நான் போற்றும்
தெய்வமாய் வாழ்கின்றாள் ஆக
அன்னையாம் பெண் தெய்வம்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திட
இந்த மகளிற்கொரு தனி நாளில்
வாழ்த்கின்றேன் உளமார மனமார
என் அருமை மனைவி என்
இல்லத்தை செவ்வன நடாத்தும்
இல்லக் கிழத்தி -என்னையும்
எம் குழந்தைகள் மற்றும்
எம்மை சார்ந்த முதியோரையும்
சிரித்த முகத்துடன் பேணி
பராமரிப்பவள் -அவள் நலமாய்
நீண்ட நாள் வாழ்ந்திட இன்று
இந்த மகளிர் தனி நாளில்
பல்லாண்டு பாடுகின்றேன்.
பண்பான மானிடராய் இந்த
தாரணியில் நாம் வாழ்ந்திட
பெண்ணை தெய்வமாய் போற்றிடவேண்டும்
அவள் என்றும் தலை நிமிர்ந்து
தெருவில் தனியாய் பயமின்றி
நடந்திட, அவள் கற்பை காத்திட
தனி மனிதர் ஒவ்வொருவரும்
முன் வந்திட வேண்டும்
பெண்ணை வீட்டில் அடைத்திடல்
பெண்ணின் சுதந்திரத்தை பறித்தல்
வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதல்ல
பெண்ணை கோயிலில் சக்தியாய்
போற்றி வணங்கும் நாம் -அந்த
தெய்வத்தை வீட்டிலும் வேறு
எங்கும் நோக்கினும் மதித்திட வேண்டும்
பெண்தான் ஆண், பெண் மகவு
' பெற்று தருபவள் பின்னே
இந்த ஆணிர்கேன் தனி இறுமாப்பு
பெண் இல்லை எனில் மானிட
வர்க்கமே அழிந்திடும் -ஆக
பெண்ணே நீ நீடு வாழ்ந்திட வேண்டும்
உம்மை நாம் தெய்வமாய் போற்றி
வணங்கி வாழ்ந்திட வேண்டும் என்று
வாசவன் நான் பல்லாண்டு பாடுகின்றேன்
---------------------