அனாதை நான்
அன்னையவள் பிள்ளைக்கு
தலை சீவி சீருடை அணிந்து
உணவூட்டி கைபிடித்து
பள்ளி அழைத்து செல்ல எனக்கில்லை
ஏன் என்றால் அனாதை நான்
பள்ளி சென்று பாடம் கற்க
வழியில்லை எனக்கு
பள்ளி வரும் பிள்ளைகளை
கைபிடித்து அழைத்து வரும்
பிறர் அன்னைகளை நான்
பார்த்து ஏங்கி நிற்கிறேன்
ஏன் என்றால் அனாதை நான்
பாடம் கற்கும் ஆவலிலே
பள்ளி ஓரம் நான் அமர்ந்து
பாடம் நடத்தும் ஆசிரியரின்
ஒலி ஓசை தனை செவி மடுத்து
நான் கேட்டு கற்கிறேன்
ஏன் என்றால் அனாதை நான்
கணக்கு பாடவேளையிலே
கல் பொறுக்கி எண்ணி பார்த்து
கணக்குகளை கணக்காக
கற்றுக்கொண்டேன்
கந்தல் ஆடை என் மேனி
எடுத்து கொடுக்க ஆளில்லை
ஏன் என்றால் ஆனதை நான்
எழுதி பழக எழுத்து பலகை எனக்கில்லை
புழுதி மணலில் விரல் என்னும் குச்சியால்
அழுத்திஎழுதி பழக கற்று கொண்டேன்
வாங்கி கொடுக்க ஆளில்லை
ஏன் என்றால் அனாதை நான்
அன்னையவள் எனக்கில்லை
கதை சொல்ல பாட்டி இல்லை
படுத்துறங்க பஞ்சு மெத்தை எனக்கில்லை
என்போன்றவர்களுக்கு
புல் வெளியே பஞ்சு மெத்தை
பூமியே என் வீடு வானமே என் கூரை
வாழ்கிறேன் இவ்வுலகில்
ஏன் என்றால் அனாதை நான்

