சற்றுமுன் பெய்த சாரல் மழை
மழை துவங்கிவிட்டது,
ம்..தனியே நனைவது
தீயாய் சுடும்.
~~~
உன் கூந்தல் காட்டிலிருந்து
ஒரு பெரு வெள்ளம்,
திக்குத்தெரியாது அலைகிறது
உனக்குள் வடிந்து விட.!
~~~
இமை முடிகளில்
ஒருதுளி முன்பனியாய்..
சற்றுமுன் பெய்த சாரல் மழை..!
~~~
பெரு மழையில்
உன்னைத்தொட்டுத் தெறிக்கிறது
கொஞ்சம் சாரல்..!
~~~