நானும் புரியாத என் புதிரும்
வலி தரும் வேளையில்
முகமோ மறைக்கிறது
எதையும் தாங்குவதாய் இதயம்
பொய்யாய் துடிக்கிறது
காண்பவர் எல்லாம்
கல்நெஞ்சாய் நினைக்க
சொல் கொண்டு நஞ்சை
என்மீது தெளிக்க
பாழாய் போன கண்ணில்
கரிக்கும் நீர் இல்லை
உள்ளே அழுகிறேன்
துடித்து மடிகிறேன்
இருந்தும் வடித்து
துலைக்காது
நாகரீகம் காக்கிறேன்
பாசத்தை காட்டவும்
ரோசத்தை காட்டவும்
மகிழ்ச்சியை பகிரவும்
துக்கத்தில் கதறவும்
சொந்தங்கள் உண்டு ஆனால்
ஏனோ எண்ணங்கள் இல்லை
நான் என்ன
தோட்டத்தில் இருந்தும்
தனிமரமா......?
தனிமையை கட்டியழும்
உயிர் ஜடமா.......?
விளங்காத மனதோடு
விலங்காக வாழ்கிறேனா......? இல்லை
விளங்கியும் வெளிகாட்டாது
விலங்கிட்டு வாழ்கிறேனா......?
புரியாத வாழ்விலே நான்
புதிராகவே போகிறேன்
புத்தனில் பாதி
புத்தியில் உள்ளது
ஆசைகளில் பாதி
அடிமனதை கொல்லுது
இரண்டும் கெட்டானாய்
இருந்தும் விட்டானாய்
என் வாழ்க்கை