மனசு - உன்னை காதலிக்க ஒரு முயற்சி

மனதில் ஒரு கேள்வி
மனசுக்கு பிடித்ததை செய் என்கிறார்களே
மனசுக்கு பிடித்தது எது வென்று அறிவது எப்படி ??
சில மணி துளிகள் யோசித்து பார்த்தேன்
மனம் மட்டும் என்றுமே புரியாத புதிராகவே இருக்கிறது

சில சமயம் நமக்கு பிடித்ததை செய்யும் போது சந்தோஷ படுகிறது
பல சமயம் நாம் நேசிக்கும் சிலருக்கு பிடித்ததை செய்யும் போதும் சந்தோஷ படுகிறது
மிக முக்கியமானது அது நமக்கு பிடிக்கவில்லை என்றாலும்

மனதிற்கும் வயது தோற்றம் உண்டு போல
குழந்தை மனம் என்கிறார்கள்
கல் மனம் என்கிறார்கள்
அன்பு மனம் என்கிறார்கள்
காதலர்களோ என் மனதை என்னவருக்கு தந்து விட்டேன் என்கிறார்கள்
கடவுளை போல உன்னை பார்ப்பதும் உணர்வதும் அரிது போல

என் கண்கள் கலங்கும் போது நீயும் கலங்குகிறாய்
என் இதழ்கள் சிரிக்கும் போது நீயும் புன்னகை பூக்கின்றாய்
நண்பர்களை சந்திக்கும் போது குதுகளிகின்றாய்
நேசிபவர்களை பிரியும் போது வாடுகின்றாய்
இதெல்லாம் உனக்கு யார் தான் சொல்லி தருகிறார்கள்
என் செவியோரம் வந்து சொல்வாயா ??

மனமே!! அனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது
நீ என்னை நன்றாக புரிந்து கொண்டாய்
ஆனால் நான் உன்னை புரிந்து கொள்வது எப்பொழுது !!

எழுதியவர் : Ranith (11-Mar-15, 6:07 pm)
பார்வை : 206

மேலே