சுமையான சோகம்

கண்ணீரில் மடல்
எழுத வந்தேன்
வெள்ளைக் காகிதமும்
விழித்தது என்னைப்
பார்த்து...............

உன் கண்ணீரைச்
சிந்திவிடாதே என்
உடலிலே உன்
கண்ணீரின் வீரியம்
தாங்கும் சத்தி
இல்லையடி எனக்கும்
மடந்தையே.......

உன் கண்ணீர்
பட்டவுடன் என்
உடல் ஓட்டை
விழும் என்று
கெஞ்சியது காற்றுக்கு
பட படத்த வண்ணம்
கட்டொடு காகிதம்.......

நானும் விட்டு விட்டேன்
என் சோகக் கண்ணீர்
அது சூடாகவே இருக்கும்
என் நீர் பட்டு உன்
உயிர் போக வேண்டமே
என்று எடுத்து வைத்து
விட்டேன் ஓரமாக..........

என் கண்ணீருக்கு
எத்தனை பலம்
எத்தனை பலவீனம்
இத்தனையும் அறிமுகப்
படுத்திய ஆசான் நீ
அல்லவா................

இதை நீ அறிவாயா
இல்லை நானேதான்
கூறவா என் உயிரே....._

கூறிய பின்னே போடி
கூறு கெட்டவளே என்று
விரட்டி விடுவாயோ
கூடியே வாழ்வோம் என்று
இணைத்து விடுவாயோ.....

சின்னச் சின்ன
வடுக்கலாக என்
உள்ளத்தில் காயம்
அதை நீயும் சேர்ந்து
சுரண்டி மடுக்கலாக
மாற்றி விட்டாயே.......

வெட்டி வேர் வாசம்
போல் விட்டு விலக
வில்லை ஐயா உன்
ஆசை என்னைக்
கட்டி அணைத்து
இன்ப முத்தம் கொடுக்கும்
வரை உப்புக் கடல் போல்
சுரக்கும் கண்ணீர்
நித்தம் நித்தம்.........

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (14-Mar-15, 10:03 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : sumaiyaana sogam
பார்வை : 93

மேலே