காடு செய்வோம்
ஏன் இந்திரனே?
என் சுந்தரனே.
செவிகளை அடைத்து
விழிகளை மூடுகிறாய்.
இவள் மேகக்கன்னிகை.
இருதிறத்துப் படைகளோடும்
மின்னல் வாளேந்தி
உன்னில்
நெருங்கிப் போரிட வருகிறேனே.
என் உணர்வில் பிறந்த
மழைத்துளி வீரர்கள் யாவரும்
ஆரவாரம் செய்கின்றார்.
பார் மன்னவா. பார்
வா காதலா வா.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலம் செய்வதைப்போல
உனக்கும் எனக்கும் ஒரு
உறவு காடு செய்வோம்..
அதில் காதல் வளர்ப்போம்.
.