என்ன சொல்வேன் நான்
உனனைக் கண்டதுமே
என் புத்திக்குப் பித்துப் பிடித்து
விட்டதடா...............
என்னை கவி வடிக்கச்
சொல்லாதே நான கண்ட
படி கிறுக்கிப்புடுவேன்.......
உன்னைக் கண்ட
நொடியே விழியும்
மந்தமானதடா
வண்ணம் புரியவில்லை
என்னை ஓவியம்
தீட்டச் சொல்லாதே
நான் கண்ணாப்பின்னா
என்று வரைந்துவிடுவேன்....
உன்னைப் பார்த்த
உடனே கால்களும் தாலம்
போடுதடா நீயும் காணப்
பாடாதே நான் சும்மா சும்மா
கும்மாங்குத்து ஆடிப்புடுவேன்....
உன்னைப் பார்த்த வேகத்திலே
நான் இருக்க குயிலின்
குரல் என்று பாடச்சொல்லாதே
நான் உன் பெயரைச் சொல்லி
சொல்லி உளறிப்புடுவேன்.......
இத்தனை மாற்றங்கள்
தந்த மன்னவனே
பார்த்தும் பாராமல்
இருக்கலாமோ என்னனே......