என் முததம்மா

முத்தம்மா முத்தம்மா
நீ என் சொத்தம்மா.

உன் கன்னம் இரண்டுக்கும்
போட்டுத் தந்தார் பட்டாம்மா
என் அத்தம்மா.....!

நான் கொட்டப் போகின்றேன்
தினமும் முத்தமாக முத்தம்மா.

விதை வளரப்போகின்றது
வெட்கமாக முத்தம்மா.

அது காய்த்துப் பூத்துக்
குளுங்கப் போகின்றது
சொர்க்கமாக முத்தம்மா..!

நான் சொக்கப்
போகின்றேன் நின்று
உன் பக்கமாக முத்தம்மா.

பெட்டைக் கோழியும்
புறு புறுக்கும் கொண்டைச்
சேவலும் கூவி எழுப்பும்
நடு ஜாமத்திலே முத்தம்மா.

கட்டு மரம் தள்ளப் போக
வேண்டும் நானும்
எட்டி எட்டி போகலாமோ
நீயும்.......

கிட்ட வந்து ஒட்டிக்க
வேண்டாமோ நானும்
தொட்டுக்க வேண்டாமோ.

காலா காலத்திலே கண்
உறங்கி எழுந்திட
வேண்டாமோ முத்தம்மா...

விரித்து விட்ட பாயும்
பரீச்சைக்கு காத்திருக்கு
கரச்சல் வேண்டாம்
கரைந்து விடு என்னுள்ளே...

எரிச்சல் வேண்டாம்
தனிஞ்சி விடு
என்னுள்ளே........

தஞ்சமானேன் நானும்
உன்னுள்ளே முத்தம்மா
முத்தம்மா..........

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (14-Mar-15, 9:17 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 107

மேலே