வாட்டி எடுக்காதே ராசா
நாடெங்கும்
தேடவில்லை
ஊரெங்கும்
தேடவில்லை
நான் உறவு
என்றும் நெருங்க
வில்லை
உள்ளத்துக்கு திரை
போட்டு பூட்டி விட்டு
நான் ஒதிங்கியே
இருந்தேன்....................
அயல் நாட்டில்
நீ இருக்காய்
நட்பு என்று
வந்தாய் அன்பை
அள்ளித் தந்தாய்.....
மெது மெதுவாக
என்னை வென்றாய்
ஓரமக உன் நினைவை
ஒரச விட்டு உள்ளத்தை
மறைத்திருந்த திரையைக்
கிழித்தெறிந்தாய்................
உள்ளே நுழைந்தாய்
நான் இதயமதை
இழந்தேன் .............
கிளி போல் என்
பேச்சு மொழியையும்
மழலை போல் என்
சிரிப்பையும் வெகுளி
என நீ பெயர்சூட்டினாய்
நானும் சரி என்று
ஏற்றுக் கொண்டேன்........
உன்னை காணும்
நாள் எண்ணி
எண்ணி என்
நெஞ்சி விம்மி
விம்மி வம்மிப் போச்சி
நானும் தேம்பி தேம்பி
அழுது நிற்கின்றேன்.........
ஏக்கம் கொண்டு
தனிமையில் நின்று
கலங்ககின்றேன்
இதற்குப் பெயர்
சூட்ட மட்டும் ஏன்
மறந்தாயோ..............
மனத் திரை கிழித்தாய்
நித்திரையைப் பறித்தாய்
சித்திரை வெயில் போல்
என்னை சித்திரவதை
செய்கிறாய்.............
விழித்திரையில்
உன் முகம் பதித்தாய்
நொடிப் பொழுதில்
எனை வெறுத்தாய்
கடிந்து கொள்ளதே
மடிந்து விடுவேன்
புரிந்து விடு நானும்
மகிழ்ந்து விடுவேன்
உயிரோடு வாழ்ந்தும்
விடுவேன்.........