லிமரைக்கூ கவிதைகள்
பட்டோடு அமர்ந்து வண்டு
வண்ண மலர் மேலே அதையும்
சேர்த்து சுமக்கின்றது தண்டு
அவசரக் கடன் வட்டி
உழைத்து ஓடாக தேய்ந்தும் அவன்
இன்னும் முடிக்கல கட்டி
வெட்டி சாந்தது மரம்
கட்டிய கூட்டில் இருந்து விழுந்த
முட்டை உடன் மரணம்
மடிப்புக் கலையாத சட்டை
பையில் அழகிய புகைப் படம்
பூரோக்கர் நெற்றியிலோ பட்டை
விளையாடிய அந்த மழலை
கணக்குப் படிக்க தன் தாயிடம்
வாங்கி எடுத்தாள் விரலை
ஏழைக்கு நிலா விளக்கு
அமா வாசை இருள் வந்தால்
போட முடியாது வழக்கு
மனிதன் அளித்தான் காட்டை
நிரை போட்டு வளர்தது விட்டான்
அடுக்கு மாடி வீட்டை