ஏக்கம்

காற்றாக இருந்திருந்தால்
உன் மூச்சோடு கலந்திருப்பேன்.....!!!

கனவாக இருந்திருந்தால்
உன் கண்ணில் நின்றிருப்பேன்.....!!!

கடிகாரமாக இருந்திருந்தால்
அடிக்கடி என்னை பார்த்திருப்பாய்...!!!

ரேகையாக இருந்திருந்தால்
உன் கையோடு சேர்ந்திருப்பேன் ....!!!

தாவணியாக இருந்திருந்தால்
உன் மாரோடு இணைந்திருப்பேன்....!!!

கொலுசாக இருந்திருந்தால்
உன் மஞ்சத்தில் சினுங்கிருப்பேன்...!!!

உன் வளையலாக இருந்திருந்தால்
எனை உடையாமல் பார்துகொண்டிருப்பாய் ...!!!

உன் பேனாவாக இருந்திருந்தால்
அடிக்கடி கடித்திருப்பாய் ...!!!

காதலனாக காத்திருக்கிறேன்
இதையெல்லாம் மெய்ப்படுத்தும் உன் வார்த்தைக்காக....!!!

எழுதியவர் : அர்ஷத் (15-Mar-15, 3:46 pm)
Tanglish : aekkam
பார்வை : 100

மேலே