ஸ்பரிசம் இதமாகின்றது

ஸ்பரிசங்கள் இதமாகின்றது
மனதை கவரும் மாலை வேளைதனில்
கண்களை வருடும்
காவியக் காதல் இது .
இரு கிளைகளின் இணைவில்
ஓர் இதயம்
காதல் இப்படியும் உதயம் .
அஸ்தமன கதிரவன் ஆச்சர்யப் படுகின்றான்
அடடா காதல் இத்தனை அழகா என்று.
இரைவேண்டாம் என்னுடன் இருந்திடு
இருள் சூழ்ந்த பின் இணைந்திடலாம்
சொண்டுரசலில் சொல்லிக் கொண்டது
சோடிக் குயில்கள் .
காண்பதெல்லாம் ரசித்துக் கொண்டு
கால் நீட்டி அமர்ந்திருந்தேன் கடலோரத்தில் .
காலை ஸ்பரித்து கற்பனையை கலைத்தது அலைகள்
அட அதுவும் இதமாய் தான் இருந்தது .