காற்று

பங்குச்சந்தையின்
ஏற்றம் இறக்கம்
பாதிக்காமல்
உலக உயிர்களை
இயக்கும் ஒற்றை
எரிபொருள்

கிளைவழி நுழைந்து
இலைகளை வருடும்
இயற்கையின் விரல்கள்

அலைகளில் மிதந்து
அதியசம் புரிந்து
ஈரத்தை இடம்மாற்றும்
வளிமண்டல திரள்கள்

வடக்கிலிருந்து வந்தால்
நீ வாடை
தெற்கிலிருந்து வந்தால்
நீ சோழகம்
கிழக்கிலிருந்து வந்தால்
நீ கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால்
நீ கச்சான்
தென்மேற்கில்
நீ சோழககச்சான்
தென்கிழக்கில்
நீ சோழககொண்டல்
தெற்கில்
இதம் நீ புரிந்தால்
நிதம் நீ தென்றல்

எழுதியவர் : தங்கமணி (16-Mar-15, 7:50 am)
Tanglish : kaatru
பார்வை : 136

மேலே