உன்னை பார்க்கணும் டா

உன் பார்வையில்
சாரலும் தூறலும்
புன்னகையில்
மின்னலும் நட்சத்திரமும்
பேச்சில்
கவிதையும் கலகலப்பும்
விழியோரப் பார்வையில்
ஈா்க்கும் காதலும்
உன் ஸ்பரிசத்தில்
அரவணைப்பும் ஆறுதலும்
கிடைக்கும் என்ற ஆவலுடன்
உன்னை காணாத கண்களை தேற்றி
உன் முகத்தை காண ஏங்கும் இந்த மனது

-உன்னை பார்க்கணும் டா-

எழுதியவர் : ஷாமினி குமார் (17-Mar-15, 10:03 pm)
Tanglish : unnai paarkanum taa
பார்வை : 302

மேலே