மெல்லிடை வருடிய கவிஞன்
அல்லினைத் தழுவி
நின்ற பகலில்
கொல்லிமலைத் தேனீ
சுரந்த தேனாய்
மல்லிகைப்பூ வாசம்
வீசும் மணமாய்
கவிதை வாசித்தான்
என் மன்னவன் எனக்கு.
சிங்கக் குரலோன் அவன்
ஏன்
கொஞ்சும் தமிழில்
மெல்லிய குரலில
கள்ளி எனக்கு
காதல்கவி பாடினான்.?
அள்ளியணைக்க எனை
வாரி கட்டியணைக்க
கரங்கள் தேவையில்லை
வசீகர குரலில் மயக்கும்
கவிதைகள் போதுமென
நினைத்தானோ திருடன் ?
எதுவாகினும்
எந்தன் மெல்லிடையில்
அந்த மாயவனின்
கவிதை வரிகள் யாவும்
கவிஞனின் விரலாய்
வருடிய காதலுணர்வு
உணராமல் இல்லை.