தினமும் காதலி
கருமேக சாரல்
நீ தலைதுவட்டி
சென்றபோது.
இளம் காலை
பிறை
நீ ஜன்னலில்
எட்டி பார்த்தபோது.
மொட்டவிழ்ந்த
இதழ்
நீ சிரித்தபோது.
பட்டுபூச்சிகள்
பாதை மறந்தது
நீ பாவாடை தாவணியில்
வந்தபோது.
பூகம்பம்மும் ,
பூ கம்பமும்,
நீ பார்த்து சென்றபோது.
மண் ஓசையை
இப்போதுதான்
கேட்கிறேன்
நீ கடந்து சென்றபோது
பிரம்மன்
தனக்காக என்று
படைத்து
தவறவிட்டான்
மண்ணில்.
இனி நீ எனக்காக
என்று
பதிந்து விட்டாய்
நெஞ்சில்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
